Jul 24, 2013

புதுவை கடைகளில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்




புதுச்சேரி, ஜூலை.24-புதுவை அண்ணாசாலை, ரங்கபிள்ளை வீதியில் உள்ள கடைகளில் வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.அதிரடி சோதனைபுதுச்சேரி பொதுமக்கள் நலன் கருதி பான்பராக், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனை அடுத்து தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் மணிகண்டன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தன்ராஜ் மற்றும் அதிகாரிகள் புதுவை அண்ணாசாலை, ரங்கபிள்ளை வீதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.ரூ.20 லட்சம்...இந்த சோதனையின் போது சில கடைகளில் இருந்து பண்டல், பண்டலாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சுமார் 250 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் எச்சரிக்கைபுதுவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பான சோதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது, “புதுவையில் முதல் தடவையாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் புகையிலை பொருட்களை மட்டும் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களை எச்சரித்துள்ளோம். அடுத்த முறை சோதனை நடத்தப்படும் போது புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அவற்றை விற்பனை செய்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்“ என்று தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் அதிரடி ரெய்டு: ரூ. 20 லட்சம் மதிப்பு போதை வஸ்துக்கள் பறிமுதல்
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று நடந்த அதிரடி ரெய்டில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை வஸ்துகள் சிக்கியது.
புதுச்சேரியில் குட்கா, பான்பாராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும், குட்கா, பான்பராக் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இருந்தும், புதுச்சேரி பகுதிகளில் போதை வஸ்துக்கள் விற்பனை கட்டுப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான புகாரின்பேரில், சுகாதாரத் துறை செயலர் ராகேஷ் சந்திரா உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் தலைமையில் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி ராவ், சிவகுமார், கிருபாகரன், நக்கீரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ரங்கப்பிள்ளை வீதி, பெரிய மார்க்கெட், அண்ணாசாலை ஆகிய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். குடோன்களில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை வஸ்துக்கள் சிக்கியது. நேற்று நடந்த ரெய்டில், ரங்கப்பிள்ளை வீதி, அண்ணாசாலை பகுதியில் மட்டும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சுகாதார செயலர் ராகேஷ் சந்திரா கூறும்போது""குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துகளை விற்பதும், அதனை வாங்கி பயன்படுத்துவதும் சட்டப்படி தவறு. மீறியும் விற்றால் ஓராண்டு வரை சிறையில் அடைக்கவும், ஒரு லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளை கடையில் விற்கக் கூடாது. ரெய்டு சிக்கும் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.

ரூ. 20 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புதுச்சேரியில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தாசில்தார் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து எரித்து அழித்தனர்.
புதுச்சேரியில் பான்பாரக், குத்கா உள்ளிட்ட சில வகைப் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையையும் மீறி ஒரு சில இடங்களில் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, வருவாய்த்துறை தாசில்தார் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. இது தொடர்பாக தாசில்தார் ரமேஷ் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், ரங்கப்பிள்ளை வீதி, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் போலீஸாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டோம்.
இதில், சுமார் 250 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து சோதனை நடத்தப்படும்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment