Jul 23, 2013

ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப்பொருட்கள் பறிமுதல்

கொரடாச்சேரி பகுதியில்
ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப்பொருட்கள் பறிமுதல்
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை
திருவாரூர், ஜூலை.22-கொரடாச்சேரி பகுதி யில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற் கொண்ட திடீர் சோதனையின் போது ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட் டன. புகையிலை பொருள் விற்பனை குட்கா, பான்மசாலா போன்ற மெல்லும் புகை யிலைப் பொருட்களை விற் பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி புகையிலைப் பொருட்களை கடைகளில் விற்பனை செய்பவர்கள், விற் பனைக்காக இருப்பு வைத்தி ருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட் டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் புகை யிலைப் பொருட்கள் விற்பனை பற்றி கண்காணிப்பு செய்ய கலெக்டர் நடராசன் உத்தர விட்டுள்ளார். இதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு புகையிலைப் பொருள் விற் பனையை கண்காணித்து கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புகை யிலைப் பொருட்களை பறி முதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல்கொரடாச்சேரி பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், கொரடாச்சேரி உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் குமார் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கடைகளில் விற்பனைக்காக இருப்பு வைக்கப் பட்டிருந்த மெல் லும் புகையிலைப் பொருட் களை பறிமுதல் செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அவை தீயிட்டு அழிக்கப்பட் டன. தீவிர நடவடிக்கைகள்இதுபற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-மாவட்டத்தில் புகையிலை பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. கொரடாச்சேரி பகுதியில் புகையிலை பொருள் விற் பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ. 15 ஆயிரத்து 800 மதிப் பிலான புகையிலை பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன.கொரடாச்சேரி பகுதியில் புகையிலை பொருள் விற் பனை குறித்த தகவல் களை 9788683354 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க லாம்.இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment