Jun 9, 2013

ரயிலில் வந்த புகையிலை பண்டல்கள் பறிமுதல்

மதுரை: சென்னையிலிருந்து மதுரைக்கு, பாண்டியன் ரயிலில் வந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பண்டல்களை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அரசு தடை செய்துள்ளது. அதையும் மீறி விற்பவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தென் மாவட்டங்களுக்கு தேவையான புகையிலை பொருட்கள் ரயில்களில் அனுப்பப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், ரயிலில் வந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்றும், சென்னையிலிருந்து மதுரை வந்த பாண்டியன் ரயிலில், 60 பண்டல்கள் இருந்தன. அவற்றில் முகவரி தெளிவாக இல்லை. போலீசார் சோதனையிட்ட போது, புகையிலை பொருட்கள் (ஹான்ஸ்) இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார், இன்வாய்ஸ் மூலம், எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது என, விசாரிக்கின்றனர். "இதில் தொடர்புடையவர்கள், ஓரிரு நாளில் கைது செய்யப்படுவர்' என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment