Jun 17, 2013

பான்மசாலா, குட்காவிற்கு ஜூன் 23 முதல்"குட்பை'

தேனி:பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை கலந்த போதை பொருட்களுக்கு, ஜூன் 23 ல் இருந்து வியாபாரிகள்,மொத்த ஸ்டாக்கிஸ்ட்கள் அனைவரும் "குட் பை' சொல்ல வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை மற்றும் நிகோடின் கலந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வது, கடந்த மே 23 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்படும் பான்மசாலா, குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அவற்றை, அதிகமாக வாங்கி இருப்பு வைத்துள்ள ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜூன் 22 க்கு பிறகு, இருப்பில் உள்ள
பான் மசாலா, குட்கா போன்றவற்றை தமிழகத்தில் விற்க கூடாது, என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஜூன் 23 முதல் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு அனைவரும் "குட்பை' சொல்லி விட வேண்டும். அதன்பிறகு, உணவுப் பாதுகாப்பு பிரிவு அலுவலர்கள் நடத்தும் சோதனையில் கண்டு பிடித்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment