Jun 7, 2013

விழுப்புரம் வணிகர்களுக்கு 1 மாதம் கால அவகாசம் பான்மசாலா, குட்கா தடை கலெக்டர் உத்தரவு


விழுப்புரம், ஜூன் 7:
பான்மசாலா, குட்கா போன்ற மெல்லும் போதை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை அமல்படுத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சம்பத் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பான் மசாலா, குட்கா, பான்பராக், புகை யிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவு பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 28&05&13ம் தேதி அர சாணை வெளியிடப்பட் டது. எனவே அர சாணை வெளியான நாளில் இருந்து 1 மாத காலத்துக்குள் பான்மசாலா மற்றும் நிக்கோடின் கலந்த உணவு பொருட்களை அப்புறப் படுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுபவர்களின் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய், குடல்புற்று நோய்கள் ஏற்படுகிறது. 10 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறக்கின்றார். எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர், துணை இயக்குனர்கள் (சுகாதார பணிகள்), முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலு வலர், மாவட்ட வணிகவரி துறை தலைவர், வட்டார போக்குவரத்து அலுவலர், நகராட்சி ஆணையர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வணிக சங்கங்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி, கள்ளக்குறிச்சி சுகாதாரதுறை துணை இயக்குனர் கோவிந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment