May 17, 2013

தமிழகத்தில் பான், குட்காவுக்கு ஓரிரு நாளில் தடை


தமிழகத்தில் பான், குட்காவுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அதற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என, தெரிகிறது.புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், தமிழகத்தில், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110வது விதியின் கீழ், கடந்த, 8ம் தேதி அறிவித்தார்.இதன்படி, புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்கப்படுகிறது. கடைகளில் விற்பனை கட்டுக்குள் வந்திருந்தாலும், மறைமுகமாக, பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்கிறது. இதை தடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் துவங்கப் படவில்லை.இதுகுறித்து, வணிக வரித் துறை அதிகாரிகள் கூறுகையில், "வரி ஏய்ப்பு நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். பான், குட்கா தடைக்கான நடவடிக்கைகள் எல்லாம், உணவு பாதுகாப்புத் துறை தான் மேற்கொள்ளும்' என்றனர்.இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பான், குட்கா மற்றும் சுவைக்கும் புகையிலைப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. விற்பனை செய்யக் கூடாது என, அறிவுறுத்தியுள்ளோம். எனினும், இதற்கு முறையாக அரசாணை வெளியானதும், நடவடிக்கைகள் துவங்கும்; அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும்' என்றார்.

No comments:

Post a Comment