Apr 10, 2013

உணவு போக்குவரத்தாளர்கள் குடிநீரை கையாளும் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள்:

1. குடிநீரை கொண்டு செல்லும் வாகனங்களில் ஏதேனும் உடைந்த பலகைகள், கூரிய அல்லது வெட்டும் தன்மை உடைய பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
2. குடிநீரை பாதிக்கக் கூடிய வகையில் வண்டியின் கூரையில் ஓட்டை அல்லது வண்டி உட்புறத்தில் துரு ஏதேனும் இல்லாமல் இருக்க வேண்டும்.
3. வண்டியின் உட்புறம் துர்நாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.
4. சிமிண்ட், மர தூசி, மணல், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் போன்றவற்றை கையாளும் வாகனங்கள் குடிநீரை கொண்டு செல்வதால் குடிநீரை எளிதில் பாதிக்கும். எனவே, சிமிண்ட், கறை, தூசு, தண்ணீர், சாயம் இவை இல்லாமல் வண்டிதளம் சுத்தமாக காய்ந்த நிலையில் இருத்தல் வேண்டும். அவ்வாகனங்களை குடிநீரை கொண்டு செல்ல தவிர்க்க வேண்டும்.
5. உணவினை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதுமான தார்ப்பாய்கள் தரமாகவும், அவை தரை தளத்திற்கும், குடிநீர் கேன்களை மேல் மூடுவதற்க்கும் ஏற்றவாறு இருத்தல் வேண்டும்.
6. குடிநீரை பாதிக்காமல் கயிற்றுத்தடம் அல்லது அடையாளம் ஏற்படாமல் இருக்க “L” வடிவில் தடுப்பான்கள் வாகனத்தில் இருக்க வேண்டும்.
7. எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் இருக்க கூடாது.
8. எடை குறைந்த குடிநீர் பாக்கெட்டுகள் மீது அதிக எடை உள்ள குடிநீர் கேண்களை அடுக்கக்கூடாது.
9. எல்லா வகை குடிநீர் கேண்களை பெட்டிகளில் நேரான முறையில் அடுக்கப்பட வேண்டும்.
10. தினசரி போக்குவரத்தின் போது எடுத்து செல்லும் குடிநீர் கேண்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகள் போன்றவற்றின் அளவு குறித்த தினசரி பதிவுகளுடன் பதிவேடு பராமரித்தல் வேண்டும்.
11. வாகனங்கள் போதிய காலமுறை இடைவெளியில் சுத்தம் செய்து, தொற்று நீக்கம் செய்யப்பட்டு, அதன் விவரங்கள் பதிவு செய்து பராமரித்தல் அவசியம்.
12. குடிநீரை எடுத்து செல்லும் பணியாளர்கள் பாதுகாப்பான குடிநீரின் முக்கியத்துவம் குறித்து அடிப்படை கருத்துக்கள் தெரிந்து இருத்தல் அவசியம்.
உணவு பாதுகாப்பு அலுவலர்
திண்டுக்கல் வட்டம்

No comments:

Post a Comment