Apr 30, 2013

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர் நாகை மாலி சுகாதாரத்துறை மானியக்கோரிக் கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசியது

சென்னை, ஏப். 29-மாநிலம் முழுவதும் அரசே மருந்து கடைகளை திறந்து மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர் நாகை மாலி கேட்டுக்கொண்டார்.சட்டப்பேரவையி
ல் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை மானியக்கோரிக் கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியது வருமாறு:

இந்தியா முழுவதும் அமல் படுத்தப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006மற்றும் விதிகள் 2011ஐ அமல்படுத்த தமிழகம் முழுவதும் 520க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் வட்டாரம், நகரம் மற்றம் மாநகராட்சிகளில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் பணிபுரிந்துவரு கிறார்கள். அவர்களுக்கு அரசு ஆணைப் படி சம்பளம் இன்றுவரை வழங்கப்பட வில்லை. நீண்ட தொலையில் பணியாற்று வோருக்கு இடமாறுதலை கவுன்சிலிங் மூலமாக முடிவு செய்யவேண்டும்

No comments:

Post a Comment