Jan 6, 2013

மிட்டாய் முதல்... மிளகாய் வரை... உஷாருங்க உஷாரு!

மிட்டாய் முதல்... மிளகாய் வரை... உஷாருங்க உஷாரு!
மிட்டாய், பிஸ்கெட் முதல் சமையல் அறையில் அடிக்கடி பயன்படும் மிளகாய், மிளகு, வெந்தயம், கடுகு வரை எல்லாவற்றிலும் புகுந்து விட்டது கலப்படம்.
அடடா, டீ செம ஸ்ட்ராங்காக இருக்குதே என்று நினைப்பவர்கள் பலர். ஆனால், கலந்துட்டான்யா புளியங்கொட்டைய... என்று பளீச் என ஒதுங்குபவர்கள் சிலர் மட்டுமே.
கடையிலே வாங்குற பிஸ்கெட்டாகட்டும், மாத்திரையாகட்டும், அதன் எக்ஸ்பயரி (காலாவதி) தேதியை எத்தனை பேர் பார்த்து கடைக்காரரிடம் கேட்கின்றனர் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே கேட்டாலும், எத்தனை பேர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுகின்றனர் என்பதும் கேள்விக்குறியே.

உணவு
பாதுகாப்புங்கிற விஷயத்தில போதிய விழிப்புணர்வு இல்லாமதான் பெரும்பாலானவங்க இருக்காங்க. விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட்டு வருது. அந்தவகையில், உணவுப்பொருட்களை சுத்தமாக தயாரித்து தரமாக விற்க வேண்டுமென அதை தயாரிப்பவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் & 2006 என்ற ஒன்றையும் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து, தெருமுனை கூட்டங்கள், நாடகங்கள், குறும்படம், பேரணி போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் இம்மாதிரி திட்டத்தை அரசு முதலில் தமிழ்நாட்டில் துவக்கியுள்ளது. நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கடந்த வாரம் அடையார் யூத் ஹாஸ்டலில், கல்லூரி மாணவர்களுக்கான 3 நாள் பயிற்சியளிக்கப்பட்டது. இதற்கு திருவான்மியூரை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பும், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தன. இதில், எத்திராஜ், எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
சட்டம் என்ன சொல்கிறது?:
தர நிர்ணயம், உணவு தயாரிப்பு, விநியோகம், இறக்குமதி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தி நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவை வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது?:
தர நிர்ணயம், உணவு தயாரிப்பு, விநியோகம், இறக்குமதி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தி நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவை வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
சுண்டல் விற்பவர்கள், தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் பதிவு செய்யவேண்டும். (கடைசி நாள் பிப்.4). பதிவுக் கட்டணம் ரூ.100.
இதனால் பயன் என்ன?:
யார்? எங்கு? என்ன? விற்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும். உணவு சரியில்லை, கலப்படம் என்றால் சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் செய்யலாம். அவர்களை சரியாக இருக்க அறிவுறுத்தவோ, தண்டிக்கவோ இயலும்.
பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
பேக்கிங் செய்த உணவில் இருப்பது வெஜ் என்றால் சிறியளவு கட்டத்தினுள் பச்சை நிறத்திலும், நான்வெஜ் என்றால் பிரவுன் கலரில் குறிக்கப்பட்டிருக்கும்.
பிராண்டின் பெயர், வியாபார பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
பேக்கிங்கில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்ற விபரம்
தயாரித்தவர் முகவரி, தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். (பொருளை சாப்பிட்டு ஏதாவது பிரச்னையென்றால், அதில் என்ன மாதிரியான பொருட்கள் இருந்தது என்பதை தெரிந்து டாக்டரிடம் தெரிவிக்கலாம்)
பேக்கிங் பின்பக்கத்தில் பேட்ச் எண் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். (தயாரிப்பாளருக்கு புகார் வந்தால் அப்பெட்டி எப்போது தயாரிக்கப்பட்டது, எங்கு அனுப்பப்பட்டது என அறியலாம்)
உணவுப்பொருள் எவ்வளவு நாட்களுக்கு பயன்படுத்தலாம் என்ற தகவல் இடம்பெற வேண்டும். (உணவுபொருட்களில் கலாவதியாகும் நாள் என்பதற்கு பதிலாக பெஸ்ட் பிஃபோர் யூஸ் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்)
கலப்படம் ஒவ்வொன்றும் ஒருவிதம் விழிச்சுக்குங்க; புகார் கொடுங்க
உணவுப்பொருள் எவ்வளவு நாட்களுக்கு பயன்படுத்தலாம் என்ற தகவல் இடம்பெற வேண்டும். (உணவுபொருட்களில் கலாவதியாகும் நாள் என்பதற்கு பதிலாக பெஸ்ட் பிஃபோர் யூஸ் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்)
சத்துக்கள் விவரம், நறுமண பொருட்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா என குறிப்பிட்டிருக்க வேண்டும்
எந்த வெப்பநிலையில் வைத்து பாதுகாப்பது, பயன்படுத்துவது என்ற விவரம் இடம்பெற வேண்டும்.
எதில் கலப்படம்? இதோ பட்டியல்:
பாலில் சுகாதாரமற்ற தண்ணீரை கலந்து விற்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது
உணவு எண்ணெயில் ஆர்ஜிமோன், கனிம எண்ணெய், ஆமணக்கு எண்ணெயை கலந்து சிலர் விற்கின்றனர். இதனால் பார்வையிழப்பு, இதய நோய்கள், வயிற்றுப்போக்கு ஏற்படும்
பருப்பு வகைகளில் கேசரி பருப்புகளை சேர்ப்பதால் முடக்குவாதம் வர வாய்ப்புள்ளது
மிட்டாய் போன்ற இனிப்புகளில் அனுமதிக்கப்படாத வண்ணங்களை கலப்பதால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் வர வாய்ப்பு
மிளகாய் தூள், மல்லித்தூள் போன்றவற்றில் செங்கல்பொடி, மரத்தூள், மாவு வகைகளை கலப்படம் செய்கிறார்கள்.
தேயிலையில் முந்திரித்தோல், கலர் பவுடர்களை சோப்பதால் வயிற்று உபாதைகள் ஏற்படுகிறது
பழரசங்கள், காற்றடைத்த பானங்களில் அனுமதியற்ற வண்ணங்கள், செயற்கை இனிப்பூட்டல்களால் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது.
புகார் தெரிவிக்க
புட் சேப்டி அத்தாரிட்டி ஆப் இந்தியா ஹெல்ப்லைன் &1800112100.
சிஏஐ இந்தியா: 044&24513191/92/93

No comments:

Post a Comment