Dec 19, 2012

தேநீர் கடை, செங்கல் சூளை உட்பட 99 தொழில்களுக்கு புதிய வரி விதிப்பு

ஊராட்சிகளில் அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில் பட்டியலில் உள்ள, 99 தொழில்களுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சிகளில், அடுத்தடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமலாகும்.

தமிழகத்தில் அபாயகரமானது மற்றும் அருவருக்கத்தக்க தொழில்கள் என அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு, வரி வசூலிக்க 1972ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை, அரசு ஊராட்சிகள் மூலம் அமல்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, வரி வசூல் செய்யப்படுகிறது. இவற்றில் தேநீர்கடைகள், பீடி சுருட்டுதல் உட்பட, பல்வேறு தொழில்கள் அடங்கியுள்ளன.ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக, பல்வேறு வரிகள் வசூலிக்கப் படுகின்றன. அதன் மூலம், கிராமங்களில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. தற்போது ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும், அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில்களுக்கு, புதிய கட்டணத்தை அரசு விதித்துள்ளது.

கடந்த, 2007ம் ஆண்டிற்கு பிறகு, இம்மாத இறுதியில், புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றும்படி, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, உத்தரவிடப் பட்டுள்ளது.அந்த உத்தரவில், 99 தொழில்களுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கேற்ப இரண்டு முதல் மூன்று மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், புதிய வரி அமலுக்கு வரும்.

1 comment: