Nov 28, 2012

High Court asks TDB to ensure food hygiene

The Kerala High Court on Tuesday directed the Travancore Devaswom Board to maintain good hygiene and manufacturing practices while preparing appam for the Sabarimala pilgrims.
A Division Bench comprising Justice Thottathil B Radhakrishnan and Justice A V Ramakrishnapillai issued the directive while considering the report of Food safety Commissioner, laboratory reports and special commissioner’s report regarding the issue. “Kootu for the appams should  be made as per the traditional practice. It should not be diluted or changed without the permission of the court. It was deplorable to see that the appam was kept in open space, leading to fungus infection,” the HC said.
The technical assistant to Food Safety Commissioner found serious irregularities in preparing and packing appam during his visit after the controversy. The court ordered that the health of the pilgrims was more important. “No food times, including prasadam unfit for consumption, should be distributed to Sabarimala pilgrims,” the court said. That the prasadam being distributed for pilgrims is ‘’unfit for human consumption’’ is cause for anxiety, it added.
The court directed that the food safety  officials should have strict vigilance over the food being sold in Sabarimala and added that the objective was to prevent  passing of food unfit for consumption as prasadam. The food safety officers should inspect the premises every four hours so as to ensure hygienic condition.
The food safety official had directed destruction of the fungus-infested appams and cleaning the premises before storage. The court also pointed out the laboratory test reports confirming that the appam samples collected from the devaswom store were infested with fungus.
The court also directed the Travancore Devaswom Board to take effective steps  to ensure that appam was packed and distributed in  ‘first in first out’ method. A separate register should be maintained for entering the details of production, packing and distribution. The lab reports had stated that the shelf life of the appam had been reduced by storing huge quantities. The buffer stock of appam need not be kept for long days.
The court  said that the contractors who had been given the right to prepare the apppam should employ skilled and experienced labourers for making high-quality appams.
The cleaning operations should not be stopped based on the plea that the manufacture of the appam  would be affected. In fact, proper hygiene should be maintained at the manufacturing unit. The personal hygiene of the labourers should also be ensured, the court said.
The court further made it clear that former chief secretary K Jayakumar would exercise all authority in his capacity as chief coordinator.
He should be provided personal staff, police security and  other facilities as if he was the chief secretary. The court also made it clear that the rights of the board members to take decisions shall not be affected by this order.
திருவனந்தபுரம், நவ.28:
சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் அப்பத்தை மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம், அரவணை பாயசம் விற்கப்படுகிறது. 7 எண்ணம் கொண்ட ஒரு பாக்கெட் அப்பம்
கி25க்கு
விற்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன் பக்தர்கள் வாங்கிய அப்பம் கெட்டுப் போயிருந்தது. இதையடுத்து, தேவசம் போர்டு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் பல லட்சம் அப்பங்கள் கெட்டுப்போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு,
கி41
லட்சம் மதிப்புள்ள அப்பங்கள் அழிக்கப்பட்டன.
இதற்கிடையே, கெட்டுப்போன அப்பங்கள் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னியில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அப்பம் கெட்டுப் போயிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த பரிசோதனை அறிக்கை, கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அப்பத்தில் கலப்படம் எதுவும் இல்லை. ஆனாலும் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்ட அப்பம் சாப்பிட தரமில்லாதது. முறையாக தயாரிக்கப்படாததால் இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீதான விசாரணை, நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கெட்டுப் போன அப்பங்களை உடனடியாக அழித்தது பாராட்டுக்குரியது. இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்கக் கூடாது.
அப்பம், அரவணையை மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்க வேண்டும். அப்பம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் மாற்றம் செய்யக் கூடாது. தேவசம்போர்டு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில்தான் இவை தயாரிக்கப்பட வேண்டும். அப்பம் தயாரிக்கும் அளவு குறைந்தாலும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
பத்திரிகைகளுக்கு பாராட்டு
அப்பம் கெட்டுப் போனது பற்றி பத்திரிகைகள் தேவையின்றி பெரிதுபடுத்தி செய்திகள் வெளியிட்டுள்ளன. இதுபோன்ற செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் தேவசம்போர்டு வக்கீல் வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி ராதாகிருஷ்ணன், “பத்திரிகைகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டு வருகின்றன” என்ற அவர், “கெட்டுப்போன அப்பம் குறித்து கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

1 comment: