Oct 22, 2012

DINAKARAN NEWS

நீரில் பரவும் நோய்களில் இருந்து மக்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்  உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுரை
நாகை, அக். 22:
மக்கள் சுற்றுப்புறத் தூய்மையை பராமரித்து, நீரில் பரவும் நோய்களில் இருந்து தங் களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரப்பும் கொசு புழு ஒழிப்பு பணியை உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் கூறியதாவது:
பகலில் கடிக்க கூடிய, நல்ல தண்ணீரில் இனப்பெருக்கம் செய்து டெங்கு காய்ச்சலை பரப்பும் டெங்கு கொசு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே டெங்கு கொசு பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
மழைக்காலம் துவங்கி விட்டதால் பொதுமக்கள் சுற்றுப்புற தூய்மை மற்றும் தன் சுத்தம் ஆகியவற்றை பராமரித்து நீரில் பரவும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும்.
கடைத்தெருவில் வியாபாரம் செய்பவர்கள் கண்ட இடங்களில் குப்பைகளை போடக்கூடாது. பேரூராட்சி குப் பை வண்டியில் மட்டுமே போட வேண்டும்.
தேவைப்பட்டால் பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்களே வந்து குப்பைகளை அள்ளி சுத்தம் செய்வார்கள். இவ்வாறு உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் கூறினார்.

No comments:

Post a Comment